அத்தியாவசிய சேவைகளை வழங்குவோருக்காக 35 அவசர குழந்தைகள் பராமரிப்பு திட்டங்களுக்கு ரொரன்ரோ நகரம், ஒப்புதல் அளித்துள்ளது,
அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் தொழிலாளர்களின் மழலையர் பாடசாலை மற்றும் பாடசாலை வயது குழந்தைகளுக்கு இந்த சேவைகள் எந்த கட்டணமும் இன்றி கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அவசரகால குழந்தை பராமரிப்பு சேவைகள், மாகாணத்தின் அத்தியாவசிய சேவை ஊழியர்களின் குழந்தைகளுக்காக மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், ஏனையவர்களுக்கு இடமளிக்கப்படாது என்றும் ரொரன்ரோ நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது.