அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்தமை தொடர்பில் இரண்டு வாரங்களுக்குள் விளக்கம் அளிக்கவேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கடிதம் அனுப்பி யுள்ளது.
இதுதொடர்பாக அகில இலங்கை மக்கள் காங்கரஸ் செயலாளர் சுபைர்தீன் தெரிவிக்கையில்,
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உயர்பீடம் கடந்த வார இறுதியில் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் தலைமையில் கூடியது. இதன்போது அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்தவர்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
இறுதியில் 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்த எமது கட்சியைச் சேந்த மூவருக்கும், அது குறித்து இரண்டு வாரங்களுக்குள் விளக்கம் கோரி கடிதம் அனுப்ப தீர்மானிக்கப்பட்டது.
அதன் பிரகாரம் இஷாக் ரஹ்மான், எம்.முஷாரப் மற்றும் அலிசப்ரி ரஹீம் ஆகியோருக்கு விளக்கம் கோரி கடிதம் அனுப்பப்பட்டிருக்கின்றது என்றார்.