தனது அரசாங்கத்தின் உறுப்பினர்கள் விடுமுறைக்காக வெளிநாடுகளுக்கு சென்றிருப்பதை ஆல்பேர்ட்டா பிராந்திய முதல்வர் ஜேசன் கென்னி (Jason Kenney) ஏற்றுக்கொண்டு விபரங்களையும் வெளியிட்டுள்ளார்.
அவருடைய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சட்டமன்ற உறுப்பினர் பாட் ரெஹ்ன் (Pat Rehn) மெக்ஸிகோவிற்கும், நகராட்சி விவகார அமைச்சர் ட்ரேசி அலார்ட் ஹவாய்க்கும் சென்றுள்ளமை தெரியவந்ததை அடுத்து இன்றையதினம் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தியிருந்தார்.
இதன்போது,அவர்களின் பயணங்கள் தொடாபல் உறுதிப்படுத்திய முதல்வர், அவர்கள் மீண்டும் நாடு திரும்பும்போது சுகாதார விதிமுறைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் கூறியுள்ளார்.
அத்துடன் கல்வி அமைச்சின் இரண்டு செயலாளர்களும் விடுமுறைக்காக ஹாவாயில் உள்ளமையையும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
எனினும் தற்போதைய நிலைமைகளில் விடுமுறைக்காக வெளிநாடுகளுக்கு அரசின் முக்கிஸ்தர்கள் சென்றிருப்பது தவறானது என்றும் இது தொடர்பில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவிருப்பதாகவும் கூறினார்.