இங்கிலாந்துக்கான விமான சேவையை அடுத்த வாரம் இந்தியா மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக இந்தியா அறிவித்துள்ளது.
இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவத் தொடங்கியதை அடுத்து, இங்கிலாந்துக்கான விமான சேவைகளை இந்தியா இரத்து செய்திருந்தது.
டிசெம்பர் 31ஆம் திகதி வரை விதிக்கப்பட்டிருந்த இந்த தடை, பின்னர், ஜனவரி 7ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், வரும் 8ஆம் திகதியில் இருந்து இங்கிலாந்துக்கு மீண்டும் விமான சேவை தொடங்கப்படும் என மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.