இந்தியாவில் ‘கோவி ஷீல்ட்’ (Covishield) தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்க நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கொரோனா வைரசுக்கு எதிராக, இந்தியாவில் கோவக்சின், போன்ற தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு இறுதிக்கட்ட மருத்துவ சோதனையில் உள்ளன.
அத்துடன், இங்கிலாந்தில் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா செனெகா (AstraZeneca) மருந்து நிறுவனமும் கூட்டாக உருவாக்கி, புனேயின் சீரம் நிறுவனம் தயாரித்து வழங்கும் கோவிஷீல்ட் (Covishield) தடுப்பூசியும் இறுதிக்கட்டத்தில் உள்ளது.
புத்தாண்டில் இந்தியாவில் முன்னுரிமை அடிப்படையில், மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள், மூத்த குடிமக்கள் என 30 கோடி பேருக்கு முதல் கட்டமாக தடுப்பூசி செலுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
தடுப்பூசி போடுவதற்கான ஒத்திகை நாளை நாடு முழுவதும் நடைபெற உள்ளது.
இந்தநிலையில், அவசரகால பயன்பாட்டிற்காக கோவிஷீல்ட் மருந்துக்கு ஒப்புதல் தர மத்திய அரசுக்கு நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.