தமிழகத்தில், முதல்வர் வேட்பாளர் குறித்த அறிவிப்பை, தேசிய ஜனநாயக கூட்டணி நான்கு அல்லது ஐந்து நாட்களில், வெளியிடும் என்று பாஜக பிரமுகர் குஷ்பு தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அதிமுகவுடன் தான் கூட்டணி என, உள்துறை அமைச்சர் அமித்ஷா தெளிவுபடுத்தியுள்ளார் என்றும், முதல்வர் வேட்பாளராக பழனிசாமியை ஏற்று கொண்டுள்ளோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
“முதல்வர் வேட்பாளராக பழனிசாமியை ஏற்று கொள்ள முடியாது என பா.ஜ.கவில் யாரும் கூறவில்லை.
முதல்வர் வேட்பாளர் குறித்து தலைவர்கள் பேசி முடிவு எடுப்பார்கள். முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து 4, 5 நாட்களில் தேசிய ஜனநாயக கூட்டணி அறிவிக்கும்.” என்றும் குஷ்பு தெரிவித்துள்ளார்.