அவசரகால பயன்பாட்டிற்காக, கோவிஷீல்ட் கொரோனா தடுப்பூசியை பயன்படுத்துவதற்கு இந்திய மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளதாக, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
“ஒக்ஸ்போர்ட், பாரத் பயோ டெக் மற்றும் அமெரிக்காவின் பைசர் ஆகிய 3 நிறுவனங்கள், கொரோனா தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்க கோரி மத்திய அரசிடம் விண்ணப்பித்துள்ளன.
சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு நேற்று ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மட்டுமே கொரோனாவுக்கு எதிரான 4 தடுப்பூசிகள் தயாராக உள்ளன” என்றும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.
இதையடுத்து, ஜனவரி 15-ம் திகதி முதல் கொரோனாவுக்கு எதிரான கோவிஷீல்ட் தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது.