ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அடுத்த அமர்வில் சிறிலங்காவுக்கு ஆதரவளிப்பதற்கு பல நாடுகள் உறுதியளித்திருப்பதாக பொது பாதுகாப்பு அமைச்சர் றியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
ஜெனிவாவில் எத்தகைய குற்றச்சாட்டுகளை சுமத்தினாலும், அதனை எதிர்கொள்வதற்கு தேவையான எல்லா பலத்தையும் சிறிலங்கா அரசாங்கம் கொண்டிருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுமக்களை காப்பாற்றுவதற்காக, சிறிலங்கா படையினர் பாரிய மனிதாபிமான நடவடிக்கையையே மேற்கொண்டனர் என்பதற்கான ஆதாரங்களை வரவிருக்கும் ஜெனிவா அமர்வுகளில் சமர்ப்பிக்க அரசாங்கம் தயாராக உள்ளது என்றும் அமைச்சர் சரத் வீரசேகர, கூறியுள்ளார்.
மேலும், ஜெனிவா அமர்வுகளில் சிறிலங்காவுக்கு ஆதரவு வழங்குவதாக, சீனா, ரஷ்யா, கியூபா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் உறுதியளித்துள்ளன என்றும், அமைச்சர் சரத் வீரசேகர மேலும் குறிப்பிட்டுள்ளார்.