சிறிலங்காவுக்கு எதிரான சர்வதேச விசாரணை தேவை என்று வலியுறுத்துபவர்கள் அரசியல் இலாபங்களுக்காகவே அவ்வாறு கூறுகின்றனர் என்று தமிழ்த் தேசிக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்தார்.
அம்பாறை ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
போர் நிறைவடைந்து 11 ஆண்டுகளாகின்ற நிலையில் சர்வதேச விசாரணைக்காக சிறிங்கா விடயத்தினை குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதாக இருந்தால் பிறிதொரு நாடே முன்மொழிவைச் செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சிறிலங்கா விடயத்தில் அவ்விதம் முன்மொழிவைச்செய்வதற்குரிய இன்னொரு நாடு முன்வரும் என்று நம்பவில்லை என்றும் அவர் கூறினார்.
புதிய பிரேரணை கொண்டுவரப்படவுள்ள நிலையில் கூட்டமைப்பு அனைத்து தரப்புக்களுடனும் இணைந்து முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்ககும் என்றும் அவர் மேலும் கூறினார்.