இலங்கை தமிழ் அரசு கட்சிக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் பாதிப்பை ஏற்படுத்தும் என தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைவ ரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்
ஆகவே தமிழ் அரசு கட்சியே தனது உள்வீட்டு பிரச்சனையை தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
யாழ் மாநகர சபையில் இந்த வருடம் மட்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் தோல்வியடையவில்லை. கடந்த 2 வருடங்களாகவே வரவு செலவு திட்டங்கள் தோல்வியடைந்துள்ளன.
ஆகவே, யாரையும் குறை சொல்ல முடியாது. இந்த நிலைமையை உணர்ந்து, அனைவரும் கூட்டமைப்பாக ஒற்றுமையாக செயற்பட வேண்டும் என அவர் அழைப்பு விடுத்துள்ளார்.