கனடிய சமஷ்டி மற்றும் பிரந்திய அரசுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தமிழ் மரபுத் திங்கள் தைமாதம் முழுவதும் அனுஷ்டிக்கப்படுவது வழமையாகும்.
அந்த வகையிலே ஜனவரி முதலாம் நாளான இன்று தமிழ் மரபுத்திங்களின் ஆரம்ப நிகழ்வுகள் இடம்பெற்றன.
நிகழ்வின் ஆரம்பத்தில், ரொரண்டோவில் உள்ள கனடிய தமிழ் கல்லூரியின் வளாகத் திறந்த வெளியில் மரபுத் திங்கள் கொடி ஏற்றி வைக்கப்பட்டது.
கனடிய தேசியக் கீதத்துடன் கனடிய கொடியும், தமிழ்த் தாய் வாழ்த்துடன் மரபுத்திங்கள் கொடியும் காலை 11மணிக்கு ஏற்றி வைக்கப்பட்டது.
கனடிய கொடியை, 43ஆவது வார்ட் கவுன்சிலர் சிந்தியா லையும் மரபுத்திங்கள் கொடியை மரபுத்திங்கள் நடுவகத்தின் இணைப்பாளர் பொன்னையா விவேகானந்தனும் ஏற்றி வைத்தனர். இந்தக் கொடிகள் மாதம் முழுவதும் பறக்க விடப்படவுள்ளது.
இதேவேளை மரபுத்திங்கள் மாதத்தினை முன்னிட்டு கருத்தரங்குகள் உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளும்
மெய்நிகர் ஊடாக நடைபெறவுள்ளன இதன் காரணமாக வழமைக்கு மாறாக உலகின் பல பாகத்திலுள்ள தமிழ் அறிஞர்களும் இணைந்து கொள்ளவுள்ளனர்.
அத்துடன் கனடாவின் அனைத்து பிராந்தியங்களிலும் மரபுத்திங்களும், பொங்கல் விழாவும் கடைப்பிடிக்கப்படவுள்ளது.