மணிவண்ணனுடன் இருக்கும் நூற்றுக்கணக்கான இளைஞர்களை ஒதுக்குவது தமிழ் அரசியலுக்கு ஆரோக்கியமானதல்ல, என அரசியல் ஆய்வாளர் சட்டத்தரணி சி.அ.ஜோதிலிங்கம் தெரிவித்தார்.
மணிவண்ணன் யாழ் மாநகர சபை முதல்வராக பதவியேற்றமை தொடர்பில் தனது முகநூலில் பதிவிலேயே ஜோதிலிங்கம் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
மணிவண்ணனை விமர்சித்து மன உளைச்சலுக்கு உள்ளாக்குவது தேவையான ஒன்றல்ல. மாறாக மணிவண்ணனை முன்வைத்து மாநகர நிர்வாகத்தை எப்படி திறம்பட நடாத்துவதே தேவையானது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மணிவண்ணனுடன் இருக்கும் நூற்றுக்கணக்கான இளைஞர்களை ஒதுக்குவது தமிழ் அரசியலுக்கு ஆரோக்கியமானது அல்ல, என்றும் அவர் மேலும் தனது பதிவில் கூறியுள்ளார்