மானிட்டோபா, அல்பர்ட்டாவை தொடர்ந்து தற்போது ரொரன்ரோவிலும் உலோகத் தூண் தோன்றியுள்ளது.
இதனை ரொரன்ரோவில் வசிக்கும் மோன் லெரின், ஹம்பர் பே டிரெயிலின் கண்டுபிடித்துள்ளார்.
நான் தினமும் காலை நடைப்பயணங்களுக்குச் செல்கிறேன். அப்போது தூண்வடிவத்தினை கண்டேன். புகைப்படம் எடுத்தும் உள்ளேன். தற்போது அது அங்கே இல்லை என்றும் கூறினார்.
இந்த மாதத் தொடக்கத்தில், ஒரு வின்னிபெக் உள்ளூர்வாசி இதேபோன்ற உலோகத் தூணைக் கண்டார். இருப்பினும், தூண் திடீரென மறைந்து போக அதிக நேரம் எடுக்கவில்லை.
இது பூங்கா அதிகாரிகள் அல்லது வேற்றுகிரகவாசிகளால் செய்யப்பட்டதா என்பது உறுதியாகத் தெரியவில்லை என்று அவர் பின்னர் கீச்சகத்தில் பதிவு செய்துள்ளார்.
சில நாட்களுக்குப் பிறகு, அல்பர்ட்டாவின் லெத்பிரிட்ஜில் ஒரு பெரிய உலோகத் தூணின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.