மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயற்பட்ட, லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் தளபதியான சகி உர் ரெஹ்மான் லக்வியை, பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி செய்த வழக்கில் பாகிஸ்தான் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மும்பை தாக்குதல் வழக்கில், 2015 தொடக்கம் பிணையில் உள்ள லக்வியை, பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்திருப்பதாக கூறப்படுகிறது.
புலனாய்வுத்துறையினர் அளித்த தகவல் அடிப்படையில், பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள், லக்வியை கைது செய்துள்ளனர் என்று பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.