அனைத்து அரசியல் கைதிகளுக்கும் பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, வவுனியா மருத்துவமனைக்கு முன்பாக இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், பங்கேற்றவர்கள், போர் முடிந்து பதினொரு வருடங்கள் கடந்தும் அரசியல் கைதிகள் மீதான வழக்குகள் விசாரணை செய்யப்படாமல் இருப்பது அப்பட்டமான நீதி மறுப்பு என தெரிவித்துள்ளனர்.
அனைத்து அரசியல் கைதிகளையும் நிபந்தனையும் இன்றி பொது மன்னிப்பளித்து விடுதலை செய்யுமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம், புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சியின் முக்கியஸ்தர்களான, நி.பிரதீபன், டொன் பொஸ்கோ, உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.