வெளிநாட்டு நாணய வெளியேற்றத்தை கட்டுப்படுத்துவதற்காக, சிறிலங்கா அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள், மேலும் ஆறு மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம், வெளிநாட்டு நாணய வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் கட்டுப்பாடுகள் பலவற்றை அறிமுகப்படுத்தியிருந்தது.
முதலில் 3 மாதங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட இந்தக் கட்டுப்பாடுகள் பின்னர், கடந்த ஜூலை மாதம், மேலும் ஆறு மாதங்களுக்கு நீடிக்கப்பட்டது.
இந்த காலஎல்லை இன்றுடன், முடிவுக்கு வரவிருந்த நிலையிலேயே, வெளிநாட்டு நாணய வெளியேற்ற நடைமுறை தொடர்பான கட்டுப்பாடுகள், மேலும் ஆறு மாதங்களுக்கு நீடிக்கப்படுவதாக, நிதியமைச்சரான சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்ச வர்த்தமானி மூலம் அறிவித்தல் விடுத்துள்ளார்.