ரொரன்ரோவின் ஸ்கார்பாரோ நீண்டகால பராமரிப்பு இல்லத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.
குறித்த நீண்டகால பராமரிப்பு இல்லத்தில் மோசமான நிலையில் பாராமரிப்பு நிலைமைகளும், செயற்பாடுகளும் காணப்படுவதனைக் கண்டித்தே இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்தப்போராட்டத்தின் போது, குறித்த நீண்டகால பராமரிப்பு இல்லத்தில் இதுவரையில் 60பேர் உயிரிழந்தமையும் சுட்டிக்காட்டப்பட்டது.
அத்துடன் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் நீண்டகால பராமரிப்பு இல்லங்களுக்கு விஜயம் செய்து நிலைமைகளை நேரில் அவதானித்து நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் கவனயீர்ப்பில் கலந்து கொண்டவர்கள் வலியுறுத்தினர்.