2021ஆம் ஆண்டு பிறப்பை முன்னிட்டும் விசேட படைப்பிரிவின் 24 ஆவது ஆண்டு நிறைவையொட்டிம் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவால் 560 சிப்பாய்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
விசேட படையின் படைத் தளபதியினுடைய சிபார்சின் பேரில் அதிகார ஆணையற்ற அதிகாரிகள் நிலை 1 இல் இருவரும், அதிகார ஆணையற்ற அதிகாரிகள் நிலை 2 இல் 18 பேரும் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.
அத்துடன், பதவி நிலை சார்ஜன்ட்கள் 61 பேரும் சார்ஜன்ட்கள் 84 பேரும் கோப்ரல்கள் 325 பேரும் லான்ஸ் கோப்ரல்கள் 70 பேர் என 560 பேருக்கு ஆளணி முகாமைத்துவப் பணிப்பகத்தால் பதவிநிலை உயர்த்தப்பட்டுள்ளனர்.