உள்ளூர் வணிக நிறுவனமான ‘ஒஃப் தி ஹூக் மீட் வர்க்ஸ்’ (Off The Hook Meatwork’s) நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட மாட்டிறைச்சி அல்லது காட்டு எருமையின் வெட்டப்பட்ட இறைச்சியை வாங்கிய யூகோன் குடியிருப்பாளர்கள் இந்த தயாரிப்புகளில் எதையும் சாப்பிடுவதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
டெட்ரா ஹைட்ரோகன்னா பினோலினால் (detra hydro ghana phenol) மாசுபடுவதால் இந்த தயாரிப்புகளை சாப்பிட வேண்டாம் எனவும் இறைச்சி திரும்பப் பெறப்படுவதாகவும் யூகோன் அரசாங்கம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
குமட்டல், உணர்வின்மை, தடுமாற்றம் மற்றும் நடைபயிற்சி சிரமம், அதிக இதய துடிப்பு மற்றும் தலைச்சுற்றல் ஆகியவற்றை உணர்ந்தவர்களிடமிருந்து புகார்கள் வந்ததையடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இறைச்சியை உட்கொண்ட ஒரு சிலர் மருத்துவ மனைகளில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளதோடு காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்