கொரோனா தடுப்பூசி முதலில் யாருக்கு போடப்படும், அதற்கான நடைமுறைகள், பதிவுகள் தொடர்பான விவரங்கள் வெளியாகியுள்ளன.
கொரோனாவுக்கு எதிராக கோவிஷீல்ட் (covishield ) மற்றும் கோவாக்சின் (Covaxin) தடுப்பூசிகளை அவசர காலத்தில் பயன்படுத்தி கொள்ள, இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது.
நாடு முழுவதும், கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஒத்திகை நடந்த மறுநாளில் இரண்டு தடுப்பூசிகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த தடுப்பூசி முதலில் முதல்கட்டமாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் ஒரு கோடி சுகாதார பணியாளர்களுக்கு வழங்கப்பட உள்ளது.
இதற்காக, அரசு மற்றும் தனியார் சுகாதார பணியாளர்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு, கோவின் டிஜிட்டல் வழித்தடத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.