நாட்டின் சிவில் நிருவாகத்துறையானது முழுமையான இராணுவ மயமாகின்ற நிலையில் சென்றுகொண்டிருப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
கொரோனா விடயங்களை கையாள்வதற்காக மாவட்ட ரீதியாக இராணுவ அதிகரிகள் நியமிக்கப்பட்டமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சிவில் நிருவாகத்தில் மேலும் மேலும் படை அதிகரிகளை இணைத்துக்கொள்கின்றமையாது நாட்டில் படைத்துறையை மையப்படுத்திய நிருவாகமொன்று விரைவில் ஏற்படும் அபாயத்தினை உருவாக்குவதாக உள்ளது.
விசேடமாக, கொரோனா நெருக்கடிகளிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கான பொறுப்பு, முப்படைகளின் தளபதி தலைமயிலான தேசிய செயலணியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அதனை ஓரளவிற்கேனும் ஏற்றுக்கொண்டாலும், அதன் பின்னர் சுகாதார அமைச்சின் செயலாளராக முன்னாள் இராணுவ அதிகரியை நியமித்தமை தற்போது மாவட்டம் தோறும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக இராணுவ அதிகாரிகளை நியமித்தமை பெரும் அச்சத்தினை ஏற்படுத்துவதாக உள்ளது என்று அவர் கூறினார்.