சோமாலியாவில் துருக்கி நாட்டவர்களை இலக்கு வைத்து, நடத்தப்பட்டுள்ள தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
சோமாலிய தலைநகர் மொகாதிசுவில் (Mogadishu) சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள துருக்கியைச் சேர்ந்த கட்டுமான நிறுவனம் ஒன்றின் பொறியியலாளர்களை இலக்கு வைத்தே, நேற்றுக் காலை இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த குண்டுவெடிப்பில் துருக்கி அதிகாரி ஒருவரும் சோமாலிய காவல்துறை அதிகாரிகள் மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் பலர் இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.