தமிழக சட்டசபை தேர்தல் பணியில் 3 இலட்சம் அரச ஊழியர்கள், ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
தமிழக சட்டசபையின் தற்போதைய 5 ஆண்டு பதவிகாலம் எதிர்வரும் மே மாதம் 21ஆம் திகதியுடன் முடிவடைகிறது.
எனவே அதற்கு முன்னதாக சட்டசபை தேர்தல் நடத்தி புதிய சட்டமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்ய தலைமை தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்து வருகிறது.
கடந்த மாதம் தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் சென்னை வந்து அனைத்துக்கட்சி பிரதிநிதிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள். அப்போது தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தலை நடத்த வேண்டும் என எல்லா கட்சிகள் சார்பிலும் தெரிவிக்சட்டமன்ற உறுப்பினர்களைகப்பட்டது.
ஏப்ரல் மாதம் தேர்தல் நடத்த வேண்டும் என அ.தி.மு.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஏப்ரல் 2ஆவது வாரம் தமிழக சட்டசபை தேர்தல் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.