சிறிலங்காவின் தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவராக, மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய பொறுப்பேற்றுள்ளார் என்று தகவல்கள் கூறுகின்றன.
சிறிலங்கா புலனாய்வு சமூகத்தின் மிக உயர்ந்த பதவியான, தேசிய புலனாய்வு தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய முன்னர், சிறிலங்கா இராணுவப் பேச்சாளராகவும், யாழ்ப்பாண மாவட்ட படைகளின் கட்டளைத் தளபதியாகவும் பதவி வகித்திருந்தார்.