லண்டனில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 17 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா மிகவும் தீவிரமாக பரவி வருவதால், லண்டன் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் நான்கு அடுக்கு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை கண்டித்தும், அவற்றைத் தளர்த்த வேண்டும் என்று வலியுறுத்தியும் லண்டன் ஹைட் (Hyde) பூங்காவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை குதிரைகளில் வலம் வந்த காவல்துறையினர் விரட்டியதுடன், போராட்டத்தில் ஈடுபட்ட 17 பேரைக் கைது செய்துள்ளனர்.