யாழ்ப்பாண பல்கலைக்கழகப் பேரவையினால் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட மாணவர்கள் சிலர், இன்று உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
தமக்கான தண்டனையை விலக்கிக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தி, குறித்த மாணவர்கள் யாழ். பல்கலைக்கழக பரமேஸ்வரர் ஆலய நுழைவாயிலில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி, சமூக இடைவெளியுடன் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேரவையில் ஆராயப்பட்ட விடயங்களைப் பகிரங்கப்படுத்தியதன் மூலம், தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும் மாணவர் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது
இதனைத் தொடர்ந்து, பல்கலைக்கழக வாயிலைச் சுற்றி சிறிலங்கா இராணுவத்தினரும், காவல்துறையினரும் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் அந்தப் பகுதியில் பதற்றமான நிலை காணப்படுவதாக கூறப்படுகிறது.