ஒன்ராரியோவில் உள்ள பாடசாலைகள் கொரோனாவின் சமுதாயப்பரவலுக்கான மூலங்களாக இருக்கவில்லை என்று முன்னணி மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த தகவலை ஒன்ராரியோ மாகாண அரசாங்கம் தெரிவித்துள்ள தோடு பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான பூர்வாங்க செயற்பாடுகளையும் ஆரம்பித்துள்ளது.
ஒன்ராரியோவில் பாடசாலைகள் மீளவும் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் அதன் பாதுகாப்பு தொடர்பில் கருத்து வெளியிடும் போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பாடசாலைகள் அனைத்திலும், பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டள்ளதோடு மாணவர்களுக்கான விசேட அறிவுரைகளும் தயாரிக்கப்பட்டுள்ளன என்றும் கூறப்படுகின்றது.