கிளிநொச்சியில், கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனை சந்திக்கச் சென்ற ஒருவர், கத்தியை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
முரசுமோட்டை பகுதியில் தங்கியிருந்த கருணாவை, நேற்று சந்திக்க சென்ற ஒருவரை, சோதனைக்குட்படுத்திய போது, அவரிடமிருந்து இரண்டு கூரிய ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக, சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபரைக் கைது செய்து, விசாரித்து வருவதாக சிறிலங்கா காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
வயலில் இருந்து திரும்பிய போது, கருணாவைச் சந்திக்க முயன்றதாகவும், வயலுக்கு எடுத்துச் சென்ற கத்தி மற்றும் அரிவாள் ஆகியனவே தன்னிடம் இருந்ததாகவும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தெரிவித்துள்ளார்.