இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி அரசியலாக்கப்படுவதாக, கோவாக்சின் (covaxin) தடுப்பூசியை தயாரித்துள்ள பாரத் பயோடெக் நிறுவன இயக்குனர் கிருஷ்ணா யெல்லா தெரிவித்துள்ளார்.
கோவாக்சின் (covaxin) மற்றும் கோவிஷீல்ட் (covishield)தடுப்பூசிகளை இந்தியாவில் பயன்பாட்டிற்கு கொண்டுவர மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில், இவற்றின் நம்பகத்தன்மை குறித்தும், தடுப்பூசிகளுக்கு அவசரமாக அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறித்தும், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர்.
இதுதொடர்பாக, பாரத் பயோடெக் நிறுவன இயக்குனர் கிருஷ்ணா யல்லா கருத்து தெரிவிக்கையில்,
“ கொரோனா தடுப்பூசியும் தற்போது அரசியலாக்கப்பட்டு விட்டது.
எனது குடும்பத்தை சேர்ந்த எவரும் எந்த ஒரு அரசியல் கட்சியுடனும் இணைந்து செயல்படவில்லை என்பதை உறுதியாகவும் தெளிவாகவும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.