இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் விரைவில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
அடுத்த சில நாட்களுக்குள் அவர் கொழும்புக்குப் பயணம் மேற்கொள்வார் என்றும், கூறப்படுகிறது.
சிறிலங்காவில் சீனாவின் தலையீடுகள் அதிகரித்து வரும் நிலையிலேயே இந்திய வெளியுறவு அமைச்சரின் பயணம் இடம்பெறவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், இந்தப் பயணத்தின் போது, சிறிலங்கா ஜனாதிபதி, பிரதமர் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளையும் சந்தித்துப் பேசுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.