அல்போர்ட்டாவின் நகராட்சி விவகார அமைச்சர் ட்ரேசி அலார்ட் (Tracy Allard) மற்றும் அவரது பணியாளர் குழுத் தலைவர் ஜேமி ஹக்காபே (Jamie Huckabay) ஆகியோர் பதவி விலகுவதாக அறிவித்துள்ளனர்.
இவர்களின் பதவி விலகல் கடிதங்கள் மாகாண முதல்வர் ஜேசன் கென்னியிடத்தில் (Jason Kenney) கையளிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் அதனை ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளார்.
இவர்கள் கெnரோனா காலத்தில் வெளிநாடுகளுக்கு விடுமுறைக்குச் சென்றமையால் அபிமானத்தினை இழந்து விட்டதாக முதல்வர் ஜேசன் கென்னி (Jason Kenney) தெரிவித்தார்.
இதேவேளை, தான்யா ஃபிர் (Tanya Fir), பாட் ரெஹ்ன் (Pat Rehn), டானி யாவ் (Tany Yao) ஆகிய உறுப்பினர்களுக்கு சட்டமன்றத்தில் வழங்கப்பட்டிருந்த பொறுப்புக்கள் அனைத்தும் மீளப் பெறப்பட்டுள்ளதாக முதல்வர் அறிவித்துள்ளார்.