மத்திய பிரதேசத்தில் கொரோனா சிகிச்சை மையங்களை மூடுமாறு மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதன்படி தலைநகர் போபாலை தவிர பிற பகுதிகளில் உள்ள கொரோனா சிகிச்சை நிலையங்கள் மூடப்படவுள்ளன.
கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ள நிலையில் மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தேவைப்பட்டால் அரசிடம் அனுமதி பெற்று மீண்டும் குறித்த மையங்கள் திறக்கப்படும் எனவும் மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் (Shivraj Singh Chauhan) கூறியுள்ளார்