விண்வெளியின் அமைதியான பயன்பாடுகளில் இருதரப்பு ஒத்துழைப்புடன் செயல்பட இந்தியா, பூட்டான் இடையே பெங்களூரில் கடந்த நவம்பர் 19ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை அனுமதி அளித்தது.
பூமியின் தொலை உணர்வு, செயற்கைக் கோள் தகவல் தொடர்பு, செயற்கைக்கோள் அடிப்படையிலான வழிகாட்டுதல், விண்வெளி அறிவியல் மற்றும் கோள்கள் ஆராய்ச்சி, மற்றும் விண்வெளி தொழில்நுட்ப பயன்பாடு போன்றவற்றில் இந்தியாவும் பூட்டானும் ஒத்துழைப்புடன் செயல்பட இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் உதவவுள்ளது.
கையொப்பமிடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தமானது விண்வெளி அமைதியான விடயங்களில் ஒத்துழைப்புக்கான மற்றும் கூட்டு செயற்குழுவை அமைப்பது தொடர்பான கால அவகாசம், ஒப்பந்தத்தினை நடைமுறைரீதியாக செயற்படுத்தும் முறைமை, உள்ளிட்ட செயற்றிட்டங்களையும் கொண்டிருக்கின்றது.