வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராட்டம் விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையில் இன்று ஏழாம் கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளன.
இந்தப்பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படும் என அரசு தரப்பில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய பேச்சுவார்த்தை குறித்து செய்தி ஆய்வாளர் ராகேஷ் திகாயித் கூறுகையில், “இன்று பல பிரச்சினைகள் விவாதிக்கப்பட உள்ளன. அரசாங்கம் விவசாயிகளின் பிரச்சினைகளை புரிந்துகொள்ள வேண்டும்.
சட்டங்கள் இரத்து செய்யப்படுவதைத் தவிர வேறு எந்த தீர்வையும் விவசாயிகள் பரிசீலனை செய்ய மாட்டார்கள். சுவாமிநாதன் அறிக்கையை அரசு அமல்படுத்த வேண்டும். குறைந்தபட்ச ஆதார விலை தொடர்பாக சட்டம் இயற்ற வேண்டும்’” எனக் குறிப்பிட்டுள்ளார்.