கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை மீறி வெளிநாடுகளுக்குச் சென்றுள்ள அரசியல் பிரதிநிதிகள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாளர்கள் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட அரசியல் பிரதிநிதிகளை அந்தந்த அரசியல் கட்சிகள் உடனடியாக பதவி நீக்கம் செய்து ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை ஒன்ராரியோ நிதி அமைச்சர் ரொட் பிலிப்ஸ் ஏற்கனவே பதவி விலகியுள்ள நிலையில் ஏனையவர்கள் எவ்விதமான அறிவிப்புக்களையும் இதுவரையில் விடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.