கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்காது வெளிநாடுகளுக்குச்சென்றிருக்கும் அல்போர்ட்டா மாகாணத்தினைச் சேர்ந்த இரு சிரேஷ்ட அதிகாரிகள் உட்பட ஏழுபேர் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இதில் இருவர் சிரேஷ்ட அரச அதிகாரிகளாக உள்ளதோடு ஏனையவர்கள் முக்கிய பதவிகளில் உள்ளவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாகாண முதல்வர் ஜேசன் கென்னியின் அறிவுறுத்தலுக்கு அமைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம், சிவில் சமுகத்திற்கான நாடாளுமன்ற செயலாளர் மற்றும் நாடாளுமன்ற கருவூலச் செயலாளர் ஆகியோரும் உள்ளடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.