ஒன்ராரியோவில் எதிர்வரும் 11ஆம் திகதி முதல் பாடசாலைகள் மீளவும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மாகாண கல்வி அமைச்சர் ஸ்டீபன் லெக்ஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதில் ஆரம்ப பாடசாலைகளும், வடக்கு ஒன்றாரியோவின் பொதுச் சுகாதார பிரிவுகளில் உள்ள மேல்நிலைப் பாடசாலைகளும் உள்ளடங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் மாகாணத்தின் பிற பகுதிகளில் உள்ள மேல்நிலைப் பாடசாலை மாணவர்கள் ஜனவரி 25ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தொலைதூரக் கற்றலின் கூடுதல் செலவினங்களைக் கணக்கிடுவதற்காக ஒன்ராரியோ கற்றலுக்கான ஆதரவு திட்டத்தின் தகுதியை விரிவுபடுத்துகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.