நீர்கொழும்பு கடற்பரப்பில் 180 கிலோ போதைப்பொருட்களுடன், மீன்பிடிப் படகு ஒன்றைக் கைப்பற்றியுள்ளதாக சிறிலங்கா கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
படகில் இருந்து 100 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 80 கிலோ கிராம் ஹசீஸ் போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக சிறிலங்கா கடற்படைப் பேச்சாளர் கப்டன் இந்திக டி சில்வா தெரிவித்துள்ளார்.
நேற்றிரவு சிறிலங்கா கடற்படை, விமானப்படை, காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு, அரச புலனாய்வு பிரிவு என்பன இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் போதே, போதைப் பொருட்களுடன் சென்ற படகு கைப்பற்றப்பட்டுள்ளது.
படகில் இருந்த சிலாபத்தை சேர்ந்த நான்கு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் கடற்படைப் பேச்சாளர் கூறியுள்ளார்.