அரச துறை நிறுவனங்களை சிறிலங்கா இராணுவம் பொறுப்பேற்று வருவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை சிறிலங்கா பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன நிராகரித்துள்ளார்
“சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடும் நடவடிக்கைகளை சிறிலங்கா இராணுவம் தற்காலிகமாகவே பொறுப்பேற்றுள்ளது.
இராணுவத்தினர் நிரந்தரமாக சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடப் போவதில்லை.
அரசாங்கத்தின் செலவை குறைக்கும் நோக்கில் தான், சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
சிறிலங்கா இராணுவத்தினரின் பிரதான கடப்பாடு தேசியப் பாதுகாப்பினை உறுதி செய்வது தான், அதன் மீதே, கூடுதல் கவனம் செலுத்தப்பகிறது” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.