வெளிநாடு சென்ற தமது கட்சியின் பிரதிநிதிகள் பதவி விலகியமை தொடர்பில் எவ்விதமான கருத்துக்களையும் வெளியிடுவதற்கு விரும்பவில்லை என்ற நிலைப்பாட்டில் கன்சர்வேட்டிக் கட்சியின் தலைவர் எரின் ஓ டூல் (Erin O’Toole) உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் தனது கட்சியின் உறுப்பினர்கள் வெளிநாடுகளுக்கு முன்னறிப்புக்களின்றி சென்றமை தொடர்பில் சர்ச்சைகள் எழுந்த நிலையில் அவர்கள் பதவி வலிகல் கடிதங்களை வழங்கியபோது அதனை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
மேலும், தனது கட்சியில் விமர்சனக்குழுவில் உள்ளவர்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தி வருவதாகவும் அக்கட்சியின் தகவல்கள் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளன.