எங்கள் மக்கள் சக்தி கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக, அதுரலியே ரத்தன தேரர் இன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில், சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
இன்று காலை 10 மணிக்கு இந்த ஆண்டின் முதலாவது நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமான போதே, அவர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
எங்கள் மக்கள் சக்தி கட்சிக்கு பொதுத் தேர்தலில் கிடைத்த ஒரு தேசியப் பட்டியல் ஆசனத்தைப் பெற்றுக் கொள்வதில் கடும் போட்டி நிலவியதால், நீண்ட இழுபறிக்குப் பின்னரே அதுரலியே ரத்தன தேரர் இன்று சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளர்.