கொரோனா வைரஸ் தொற்றின் புதிய பிறழ்வு காரணமாக இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்துள்ளது.
தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள அனைத்து நபர்களும் மருத்துவ மையங்களில் உள்ள தனி அறைகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
அவர்களுடன் பயணம் செய்தவர்கள் குடும்ப தொடர்புகள் மற்றும் இதர நபர்களை கண்டறிவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் ஜீன் வகைப்படுத்தலுக்காக உறுதி செய்யப்பட்டுள்ள மாதிரிகள் பத்து ஆய்வகங்களில் பரிசோதிக்கப்படுவதாகவும் சுகாதார அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.