நடிகர் ரஜினிகாந்த்தை அரசியலுக்கு வருமாறு கோரி, ஆர்ப்பாட்டம் நடத்தினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
‘ரஜினி அரசியலுக்கு வர வேண்டும்’ என, அழைப்பு விடுத்து, வரும், 10ம் நாள், சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த, ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் சிலர் திட்டமிட்டுள்ளனர்.
இதையடுத்து, வடசென்னை மாவட்ட மக்கள் மன்ற செயலர் சந்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில், , ‘ரஜினியின் அரசியல் நிலைப்பாட்டை எதிர்த்து, நடத்த திட்டமிடப்பட்டுள்ள ஆர்ப்பாட்டத்தில், மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள் யாரும் பங்கேற்க வேண்டாம் என்றும், மீறுவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றும், தெரிவித்துள்ளார்.
தென்சென்னை மேற்கு மாவட்ட செயலர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையிலும், இத்தகைய போராட்டத்திற்கு, தலைமை மன்றம் அனுமதி அளிக்கவில்லை என்றும், அனைவரும், ரஜினிகாந்தின் முடிவுக்கு கட்டுபட்டு, அடுத்த அறிவிப்பு வரும் வரை,பொறுமை காக்க வேண்டும் என்றும், தெரிவிக்கப்பட்டுள்ளது.