குளிர்கால காலத்தின் இரண்டாவது நாளில் இணையச் சேவை தடங்கலால் இணையவழி வகுப்புகள் பாதிக்கப்பட்டதாக ஒன்ராறியோவின் பாடசாலை வாரியங்கள், தெரிவித்துள்ளன.
இதனால் மாணவர்கள் மற்றும் ஊழியர்களை பொறுமையாக இருக்குமாறும் பாடசாலை வாரியங்கள் கேட்டுக்கொண்டுள்ளன.
கிங்ஸ்டன், வின்ட்சர் பகுதி, ஹோல்டன் (Halton) மற்றும் ஒட்டாவா பகுதியில் உள்ள பொது மற்றும் கத்தோலிக்க வாரியங்கள் அனைத்தும் சமூக ஊடகங்களில் இதுதொடர்பான அறிவிப்புகளை வெளியிடப்பட்டுள்ளன.
Cogeco உள்ளிட்ட பல இணைய வழங்கி நிறுவனங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த பாடசாலை வாரியங்கள் தெரிவித்துள்ளன.