கொரோனா வைரஸ் தடுப்பூசியை போட்டுக் கொள்வதால் எதிர்கொள்ளக் கூடிய ஆபத்து குறைவு
கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார், கொரோனா வைரஸ் தடுப்பூசியை போட்டுக் கொள்வதால் எதிர்கொள்ளக் கூடிய ஆபத்து குறைவு தான் என்று ஒன்ராறியோ மருத்துவ சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார் தற்போது கொரோனா தடுப்பூசி பரிசோதனை திட்டங்களில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை.
ஆனால் இவர்களுக்கு கொரொனா தொற்று ஏற்பட்டால், கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாக நேரிடும் என்று, ஒன்ராறியோ மருத்துவ சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, கொரோனா வைரசினால் ஏற்படும் பாதிப்புகளை விட, தடுப்பூசியால், எதிர்கொள்ளக் கூடிய அறியப்படாத அபாயம் குறைவானதாகவே இருக்கும் என்று, ரொறன்ரோவில் உள்ள இருதய அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் சமந்தா ஹில் (Samantha Hill) கூறியுள்ளார்.