சஸ்காட்செவன் பிராந்தியத்தினைச் சேர்ந்த 106வயதுடைய சிரேஷ்ட பிரஜையொருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகிய போதும் அதிலிருந்து மீண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரூபினா வென்செல் (Rubina Wenzel) என்ற சிரேஷ்ட பெண்மணியே இவ்வாறு தொற்றிலிருந்து மீண்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர் நீண்டகால பராமரிப்பு இல்லத்தில் தங்கியிருந்தபோது கடந்த மாத நடுப்பகுதியில் கொரோனா தொற்று ஏற்பட்டிருந்ததாகவும் தற்போது அவர் அதிலிருந்து மீண்டுள்ளதாகவும் அவரது புதல்வி குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் இவர் குணமடைந்துள்ளமையானது அதிசயம் தான் என்று அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் ஸ்மித் கூறியுள்ளார்.