ஜனாதிபதி பதவியை பைடனுக்கு விட்டுக் கொடுக்கமாட்டேன் என்று, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், மீண்டும் தெரிவித்துள்ளதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
ஜோர்ஜியா மாகாணத்தில், செனட் உறுப்பினர்களுக்கான தேர்தல் பிரசாரத்தில், உரையாற்றியுள்ள ட்ரம்ப், ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை ஏற்க முடியாது என்றும், ஜனாதிபதி பதவியை விடமாட்டேன் என்றும் கூறியிருக்கிறார்.
அதற்காக அனைத்து வழிகளிலும் போராடுவேன் என்றும், தெரிவித்துள்ள அவர், தேர்தல் கல்லூரி வாக்களித்து விட்டால், பைடன் வென்றதாகி விடாது என்றும், குறிப்பிட்டுள்ளார்.
பைடனை வெள்ளை மாளிகைக்குள் நுழைய விடமாட்டேன் என்றும் சூளுரைத்துள்ள ட்ரம்ப், நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில், ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை ஏற்க முடியாது என, குடியரசு கட்சியினர் வலியுறுத்த வேண்டும் என்றும், வலியுறுத்தியுள்ளார்.