சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நாளை பேச்சுக்களை நடத்தவுள்ளார்.
கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவரின் இல்லத்தில், நாளை காலை 9.30 மணியளவில் இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன், பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்தச் சந்திப்பின் போது, ஜெனிவா விவகாரம், மாகாண சபைகள், 13 ஆவது திருத்தச்சட்டம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் தொடர்பாக கலந்துரையாடப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.