பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சன், இந்திய பயணத்தை ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.
இந்தியாவின், 71வது குடியரசு தின , நிகழ்வில், பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சன் சிறப்பு விருந்தினராக, கலந்து கொள்ள இருந்தார்.
இந்தநிலையில், பிரித்தானியாவில், அதிக வீரியமுள்ள, உருமாறிய கொரோனா வேகமாக பரவி வருவதால், மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நெருக்கடி காரணமாக, இந்தியாவுக்கான பயணத் திட்டத்தை, பொறிஸ் ஜோன்சன் ரத்து செய்துள்ளார்.





