நல்லூர் பிரதேசசபையில் வி.மணிவண்ணன் தரப்பை ஏன் ஆதரித்தோம் என தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் வெளியிட்ட அறிக்கைக்கு பதில் வழங்கி, அறிக்கையொன்றை நல்லூர் பிரதேசசபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் கு.மதுசுதன் அனுப்பி வைத்துள்ளார்.
அந்த அறிக்கையில், நல்லூர் பிரதேச சபையில் தங்கள் சுயேட்சை குழுவின் நிலைப்பாடு பற்றிய ஊடக அறிக்கையினை ஊடகங்கள் வாயிலாக பார்த்திருந்தேன்.
அது சம்மந்தமாக தங்களுக்கும், தங்களையும் என்னையும் தீர்மானிக்கும் சக்தியான மதிப்பார்ந்த மக்களுக்கும் என் நிலைப்பாட்டினை தெளிவுபடுத்துவதும் இப்போது தங்கள் அறிக்கையினால் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
நல்லூர் பிரதேச சபையின் புதிய தவிசாளர் தேர்வுக்காக 30.12.2020 அன்று தமிழ் தேசியக் கூட்டமைபின் சார்பில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தினால் என்னை வேட்பாளராக களமிறக்கியிருந்ததை மக்கள் நன்கறிவர்.
தவிசாளர் தெரிவில் கூட்டமைப்பினை ஆதரிக்கும் படி கூட்டமைப்பு சார்பிலும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் சார்பில் தலைவரும், தேசிய அமைபாளரும் தங்களினை கோரியிருந்தார்கள்.
எனினும் அந்த கோரிக்கையெல்லாவற்றினையும் நிராகரித்து நல்லூரில் கூட்டமைப்பினை தோற்கடித்த பின் கூட்டமைப்புக்கு எதிராக தாங்கள் தங்கள் உறுப்பினர் இருவரை வாக்களிக்க அனுமதித்துவிட்டு புதிய வியாகியானங்களினை கூற முற்படுவது சற்றும் வேடிக்கையானதாகவே இருகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.